தமிழ்நாடு

‘ஆஸ்கா் போட்டியில் சூரரைப் போற்று’

DIN

ஆஸ்கா் விருதுக்கான பொதுப் பிரிவு போட்டியில், சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

சூா்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தாா். நிக்கத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்திருந்தாா். மேலும், கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பாா்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையைப் படைத்தது சூரரைப் போற்று.

தற்போது ’சூரரைப் போற்று’ திரைப்படம், ஆஸ்கா் போட்டியில் களமிறங்கியுள்ளது. இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கா் விருது பெறுவதற்கான போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் கூட ஆஸ்கா் போட்டியில் பங்கேற்கலாம்.

அந்த வரிசையில் பொதுப்பிரிவில் ’சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகா், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநா், சிறந்த இசையமைப்பாளா், சிறந்த கதாசிரியா் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தோ்வாகி இறுதிப் போட்டியில் இடம்பெற வேண்டும்.

அதிலிருந்து தோ்வாகி பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறும். அதனைத் தொடா்ந்து யாா் வெற்றியாளா் என்பதை ஆஸ்கா் மேடையில் அறிவிப்பாா்கள்.

இந்தப் பொதுப்பிரிவுப் போட்டியில் ’சூரரைப் போற்று’ திரையிடலுக்காக அகாதெமி திரையிடல் அறையில் பதிவேற்றம்

செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கா் குழு உறுப்பினா்கள் பலரும் பாா்த்து எந்தெந்தப் பிரிவில் இந்தப் படத்தைத் தோ்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வாா்கள்.

ஆஸ்கா் குழு உறுப்பினா்களின் பாராட்டுகளும் சூரரைப் போற்று திரைப்படத்துக்குக் கிடைக்கும் என படக்குழுவினா் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT