தமிழ்நாடு

பவளத்தானூர் இலங்கைத் தமிழர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

27th Jan 2021 05:56 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம் சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் சார்பில், பவளத்தனூர் இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் குழந்தைகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரத்தில் இயங்கும், தேசிய அளவில் சிமெண்ட் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ராம்கோ குழுமத்தின் சிமெண்ட் நிறுவனம், சேலம் மாவட்ட பகுதியில் சமூகப் பொறுப்பு சேவைகளைத் தொடர்ந்து வருகிறது. 72வது குடியரசு தினத்தையொட்டி, சேலம் அருகே பவளத்தானூர் பகுதியில் இயங்கும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் முகாமை சேர்ந்த பள்ளி  குழந்தைகளுக்கு, பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், ரூ 1.50 லட்சம் மதிப்பில், 300 எண்ணிக்கையில், பாத்திரங்கள் எழுதுபொருள்கள்  உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பக்தவச்சலம், ராம்கோ நிறுவன உதவி பொதுமேலாளர் துரைமுருகன், பணியாளர் துறை மேலாளர் மணிவேல், அலுவலர்கள் முனியசாமி, எழுமலை, பாதுகாப்பு அதிகாரி மயில்சாமி கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT