தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே தனியார் குடோனில் தீ விபத்து

27th Jan 2021 05:50 PM

ADVERTISEMENT

 

திருவள்ளூர் அருகே தனியார் குடோனில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து 3 மணி நேரம் போராடித் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். 

இந்த விபத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள் பேக்கிங் செய்யும் மரக்கட்டைகள் எரிந்து நாசமானது. திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் அடுத்த உட்கோட்டை கிராமத்தில் குளிர்சாதனப் பெட்டி, சலவை செய்யும் இயந்திரம் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களைப் பத்திரமாகக் கொண்டு செல்லும் வகையில் மரக்கட்டை மற்றும் நெகிழி பொருள்களால் பேக்கிங் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை குடோனில் புதன்கிழமை 3 மணி அளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலை குடோனை விட்டு வெளியேறி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதற்குள் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது. அதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, திருவள்ளூர் , திருவூர் ஆகிய ப குதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும், இதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசமடைந்து உள்ளதாகவும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags : Tiruvallur fire
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT