சென்னை: தமிழகத்தில் இருந்து இவ்வாண்டு பத்ம விருதுகள் பெற்றுள்ளோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கழக முன்னோடியும் 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாயுமான பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, கழகத்துக்கும் கிடைத்திருக்கும் பெருமை. அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர் மட்டுமல்ல, கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர்.
ADVERTISEMENT
அவருக்கும் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஶ்ரீ விருது பெற்ற தமிழகக் கலைச்செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.