தமிழ்நாடு

சங்ககிரி அரசு அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குடியரசு நாள் விழா 

26th Jan 2021 12:28 PM

ADVERTISEMENT

 

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை குடியரசு நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மு.அமிர்தலிங்கம்  இவ்விழாவிற்கு தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.  குடியரசு நாள் விழாவினையொட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் மாணிக்கம், சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.விஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயகுமார், வட்ட வழங்கல் அலுவலர் சிவராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலக  உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.  

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.எஸ். ரவிச்சந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி மகேஸ்வரி மருதாசலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். சங்ககிரி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
 
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்...

ADVERTISEMENT

சங்ககிரியில் உள்ள  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடியரசு நாள்விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்கள் 1, 2  உள்ளிட்ட நான்கு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.  மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.பாக்கியம் தேசியக் கொடியையேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.  குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் எண்.1 டி.சுந்தர்ராஜன், எண்.2 எஸ்.மகேஷ்வரி, வழக்குரைஞர் விஜயபாஸ்கர்,  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் பணிபுரியும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட உரிமையயில் நீதிபதி காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
 

Tags : salem
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT