தமிழ்நாடு

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் குடியரசு நாள் விழா 

26th Jan 2021 02:28 PM

ADVERTISEMENT


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வண்டலூர், ஊனமாஞ்சேரி தமிழ்நாடு உயர் பயிற்சியகம் அமைந்துள்ளது.

இந்த தமிழ் நாடு காவல் உயர் பயிற்சிகத்தில் குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது. 72-வது இந்திய குடியரசு நாள் விழா தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் இயக்குனர் எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 11வது குழுவைச் சார்ந்த பயிற்சி துணை  கண்காணிப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

நிகழ்ச்சியில் உயர் பயிற்சியாக கூடுதல் இயக்குனர் என். பாஸ்கரன் துணை இயக்குனர்கள்  ஜெயலட்சுமி, எஸ் செல்வராஜ், காவல் உயர் பயிற்சியாக காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

காவல் துறை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் உயர் பயிற்சியில் பணி புரியும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
 

ADVERTISEMENT

Tags : Republic Day
ADVERTISEMENT
ADVERTISEMENT