தமிழ்நாடு

நீலகிரியில் தொடங்கியது பறவைகளின் உள்ளூர் வலசை

26th Jan 2021 12:44 PM | என். ஜான்சன்

ADVERTISEMENTஉயிர்ச்சூழல் மண்டலமாக உள்ள நீலகிரி  மாவட்டத்தில் தற்போது பறவைகளின் உள்ளூர் வலசை  பயணம் துவங்கியுள்ளது.

இந்த உள்ளூர் வலசையில் பறவைகள் மலைப் பகுதியிலிருந்து சமவெளிப் பகுதிகளிலும் ஒரு மலைப்பகுதியில் இருந்து மற்றொரு மலை பகுதிகளுக்கும் இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டு வலசைப்பாதை பயணம் சற்று தாமதமாகத் துவங்கியுள்ளது.

காரணம் தொடர்மழை மற்றும்  உறைபனிப் பொழிவு குறைவு  ஆகியவை இந்த  உள்ளுர் வலசை பாதையை துவங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வலசை பாதையில் உதகை, கொடநாடு, குன்னூர், பர்லியார், கோத்தகிரி ஆகிய பகுதியில் இருந்து துவங்கும்.

ADVERTISEMENT

கிங்பிஷர், நீலகிரி லாபிங்திரஸ், ஆரஞ்சு பிளாக், பிளைகேச்கர், ஒயிட் ஐ, நீலகிரி பிளை கேப்சர், பிளாக் டிராங்கோ, கிரோ வேக்டைல்,   செவன் சிஸ்டர்ஸ்,  லாபிங் திரஸ்,  பபுள் பின்ச்,  ஒரண்டல் ஒயிட் அய்,   கிரீக் கேனரி பிளை கேச்சர்  ஆகிய  பறவைகள் தற்போது வலசை பாதையை துவங்கியுள்ளன.

இந்த வலசை பாதையில் செல்லும் பறவைகள்  நீலகிரியின் பல்வேறு இடங்களில் எளிதாக காண முடிகிறது.  குறிப்பாக உதகை  அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா தொட்டபெட்டா மலை சிகரம், கொடநாடு காட்சி முனை பர்லியார், குன்னூர், கூடலூர் ஊசிமலை காட்சிமுனை  ஆகிய பகுதியிலிருந்து இடம்பெறுகின்றது.


 
இந்த  வலசை செல்லும் பறவைகள் அனைத்தையும் உதகையைச்  சேர்ந்த புகைப்படக் கலைஞர் மதிமாறன் புகைப்படங்கள் எடுத்தும், காணொலிகள் மூலம் ஆவணப்படுத்தி வருகிறார். 

ஒன்பது  மாத கரோனா காலக் கட்டத்தில் பொதுமக்கள் கூட்டம் இன்றி சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. அந்த சமயங்களில் இந்த பறவைகள் அனைத்தும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் எளிதாக காண முடிந்தது.

இப்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களில்  இருந்து தங்களின் இயல்பான வலசை பாதைக்கு இவை திரும்ப  துவங்கியுள்ளன. மற்றும் தொடர்மழை, இந்த ஆண்டு  பனிப்பொழிவு குறைவு காரணமாக இந்த வலசைப்பாதை தாமதமாக தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
 

Tags : Nilgiris nilgiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT