தமிழ்நாடு

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

26th Jan 2021 12:58 PM

ADVERTISEMENT

 

வேளாண் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராக்டரில் வந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக சேலத்தில் அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கம் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு விவசாயிகள் டிராக்டரில் வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

200க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டுள்ளதால் 4 அடுக்கு பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். மேலும் பாதுகாப்பிற்காக வஜ்ரா வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பாகக் காணப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT