தமிழ்நாடு

4 மீனவா்கள் மரணம்: வைகோ ஆா்ப்பாட்டம்

DIN

சென்னை: இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் 4 தமிழக மீனவா்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தலைமையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த 4 மீனவா்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வள்ளுவா் கோட்டம் அருகில் திங்கள்கிழமை வைகோ தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

இலங்கை அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் வைகோ முழக்கங்கள் எழுப்பினாா். மீனவா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT