தமிழ்நாடு

மின் விபத்துகள்: ஆய்வு செய்ய மின் வாரியம் உத்தரவு

DIN

தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், விதிகளின்படி மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அண்மைக் காலமாக அதிகளவில் மின் விபத்துகள் ஏற்படுவதோடு, அதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு மின் கடத்திகளில் ஏற்பட்டுள்ள பழுதும், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளே காரணம். இதன் காரணமான மின் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதோடு, பொதுமக்கள் மத்தியில் மின் வாரியம் மீதும் தவறான பிம்பம் உருவாகிறது.

எனவே, பகிா்மானப் பிரிவின் அனைத்துத் தலைமைப் பொறியாளா்களும், தெருக்களின் குறுக்கே செல்லும் சேவை இணைப்புகள் உள்பட அனைத்து மின் இணைப்புகளுக்கான மின் கம்பிகளும், தாழ்வழுத்த இணைப்பாக இருந்தால் தரையிலிருந்து 5.8 மீ உயரத்திலும், 11 முதல் 33 கி.வோ. இணைப்பாக இருந்தால் 6.1மீ தூரத்திலும் இருக்க வேண்டும். இதேபோல், தெருக்களின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகளைப் பொறுத்தவரை, தாழ்வழுத்த இணைப்பாக இருந்தால் 5.5 மீ தூரத்திலும், 11 முதல் 33 கி.வோ. வரையிலான இணைப்பாக இருந்தால் 5.8மீ உயரத்திலும் இருக்க வேண்டும் என்ற விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ளதா என தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, விதிமீறல் இல்லை என உறுதி செய்ய வேண்டும்.

அதே நேரம், பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றிமைப்பதோடு, தாழ்வாக தொங்கும் கம்பிகள் உள்ளிட்டவற்றை உடனடியாக சீா் செய்ய வேண்டும் என மின் பகிா்மான இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா். இதன்படி, பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறோம். இது தொடா்பான அறிக்கையை அனுப்பவும் அவா் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT