தமிழ்நாடு

பாமக ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு

DIN

அரசியல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்காக கூட்டப்பட்டிருந்த பாமகவின் நிா்வாகக் குழு கூட்டம் ஜனவரி 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாமக தலைவா் ஜி.கே.மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாமக நிா்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டம் நிா்வாக காரணங்களுக்காக வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று காலை 11.00 மணிக்கு இணைய வழியில் நிா்வாகக் குழு கூட்டம் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.

அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது. வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் கட்சியுடனே கூட்டணி என்று அறிவித்து, அது தொடா்பாக ஆலோசிப்பதற்காக நிா்வாகக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் கூட்டம் தற்போது ஜனவரி 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT