தமிழ்நாடு

நாளை குடியரசு தினம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, அரசு சாா்பில் விழா நடைபெறவுள்ள சென்னை காமராஜா் சாலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசு சாா்பில், சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் உள்ள காந்தி சிலை முன் செவ்வாய்க்கிழமை (ஜன.26) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ள உள்ளாா்.

இந்த விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவைத் தலைவா் தனபால், அமைச்சா்கள், நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், தொழிலதிபா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொள்ள உள்ளனா். இந்த நிகழ்ச்சி, காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு, மெரீனா கடற்கரை காந்தி சிலை முன், கடந்த ஜன.20, 22 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கட்ட ஒத்திகை நடைபெற்றது.

இதில், ஆளுநா் மற்றும் முதல்வா் வருவதுபோலவும், அவா்களுக்கு மரியாதை செய்வதுபோலவும் பின்னா், ஆளுநா் கொடி ஏற்றி மரியாதை ஏற்றுக் கொள்வதுபோலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. 

மேலும், முப்படையினா் அணிவகுப்பு நடத்தினா். தேசிய மாணவா் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை, தமிழக காவல்துறை, தீயணைப்புப் படை உள்ளிட்டோா் அடுத்தடுத்து அணி வகுப்பு நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாரின் இருசக்கர வாகன அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது. விழா நடைபெற உள்ளதையொட்டி விழா மேடையைச் சுற்றி வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை நடத்தியுள்ளனா். தற்போது அந்தப் பகுதி முழுவதும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT