தமிழ்நாடு

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் நமச்சிவாயம்

DIN

புதுவையின் அமைச்சர் நமச்சிவாயம் தனது அமைச்சர் பதவி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜிநாமா செய்தார். அவருடன் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏயும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

புதுவை காங்கிரஸ் அரசின் இரண்டாவது அமைச்சராக இருப்பவர் நமச்சிவாயம். பொதுப்பணித்துறை, கலால் துறை உட்பட 19 துறைகளை அவர் வைத்திருந்தார். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியையும் அவர்  வைத்து இருந்தார். கடந்த ஆண்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு காரைக்காலை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 

அது முதல் அமைச்சருக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறார் என்ற தகவல்  பரவியது. இதனை உறுதி செய்யும் வகையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை இரு தினங்களாக நடத்தினார். இதன்படி பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்தை சந்தித்து பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அளித்தனர்.

மேலும் காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்திக்கும் ராகுல் காந்தி எம்பிக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பவுள்ளனர். இதனைத் தொடர்ந்து 27 ஆம் தேதி தில்லி செல்லும் அவர் பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்.  அடுத்ததாக வரும் 31-ஆம் தேதி புதுச்சேரி ஏ.எப்.டி. மைதானத்தில் நடைபெறும் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன்  பங்கேற்கிறார்.

அப்போது இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைவார்கள் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT