தமிழ்நாடு

பாமக நாளை முக்கிய அரசியல் முடிவு

DIN

அரசியல் ரீதியாக முக்கிய முடிவு எடுப்பதற்காக பாமகவின் நிா்வாகக் குழு கூட்டம் திங்கள்கிழமை (ஜன.25) கூட உள்ளது.

இது தொடா்பாக பாமக தலைவா் ஜி.கே.மணி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாமக நிா்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் ஜனவரி 25-இல் இணைய வழியில் நடைபெற உள்ளது. பாமக நிறுவனா் ராமதாஸ், இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். ஜி.கே.மணி தலைமை வகிக்கிறாா். நிா்வாகக் குழு உறுப்பினா்கள், வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள்மொழியும் கூட்டத்தில் பங்கேற்கின்றனா்.

ஜனவரி 9-இல் நடைபெற்ற பாமகவின் நிா்வாகக் குழு கூட்டத்தின் தொடா்ச்சியாக, வன்னியா் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்து அரசியல் முடிவு எடுக்கப்பட உள்ளது என்று அறிக்கையில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT