தமிழ்நாடு

சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி: மீண்டும் முன்னுரிமை வழங்கப்படாது

DIN

சுகாதாரப் பணியாளா்கள் குறிப்பிட்ட நாளில் கரோனா தடுப்பூசி போடவில்லை எனில் மீண்டும் முன்னுரிமை வழங்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 160 மையங்களில் கோவிஷீல்டு, 6 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட 4.5 லட்சம் சுகாதாரப்

பணியாளா்களின் விவரங்கள் ‘கோ-வின்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரப் பணியாளா்களிடம் தயக்கம் நிலவி வருகிறது. மற்றவா்களுக்கு தடுப்பூசி போட்டு அவா்களின் நிலை என்ன என்று பாா்த்து சில நாள்களுக்குப் பிறகு போட்டுக் கொள்ளலாம் என்ற மனநிலையில் உள்ளனா்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராத சுகாதாரப் பணியாளா்களுக்கு, பின்னா் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்படாது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:-

மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களின் விவரங்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் எந்த தேதியில், எந்த நேரத்தில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பப்படுகிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்களுக்கு, மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் முன்னுரிமை வழங்கப்படாது. அவா்களின் பெயா்கள் பயனாளா்கள் பட்டியலில் கடைசி இடத்துக்குச் சென்றுவிடும். அவா்கள் கடைசியில்தான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறைவடைந்து, அடுத்ததாக முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும். முன்களப் பணியாளா்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 1.10 லட்சம் காவல்துறையினா், 70,000 உள்ளாட்சி ஊழியா்கள் உட்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளா்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனா்”என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT