தமிழ்நாடு

கோவை கோனியம்மன் கோவிலில் முதல்வர் சாமி தரிசனம்

23rd Jan 2021 09:55 AM

ADVERTISEMENT

 

கோவை: தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக கோவைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தேர்தல் பிரசாரத்தை துவங்குவதற்கு முன்னதாக கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. முதல்வருக்கு கோவில் பூசாரிகள் சார்பில் சாமியின் உருவப்படம் வழங்கப்பட்டது. 

உடன் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே. அர்ச்சுனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து கோவை ராஜவீதி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

கோவையில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, பேரூர் ஆதினம் பூர்ணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகாளாரிடம் முதல்வர் ஆசி பெற்றார்.

Tags : coimbatore Koniamman temple
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT