தமிழ்நாடு

சென்னையில் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டார் மத்திய மீன்வளத்துறை அமைச்சர்

22nd Jan 2021 09:10 PM

ADVERTISEMENT

சென்னை மீன்பிடி துறைமுகத்தை, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று பார்வையிட்டார்.

அவருடன் மத்திய மீன்வளத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழக அரசின் செயலாளர் திரு கோபால், சென்னை துறைமுக கழக துணைத் தலைவர் பாலாஜி அருண் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள், வசதிகள், சமூக நலத்திட்டங்கள், காப்பீடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார். 

மீனவர்களிடம் இருந்து அவர் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர், மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தும் மத்திய அரசின் திட்டங்கள், மீனவர் நலனுக்கான திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
 

ADVERTISEMENT

Tags : Giriraj Singh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT