தமிழ்நாடு

பொதுப்பணி ஒப்பந்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

DIN


சென்னை: கடந்த மூன்று மாதங்களில் பொதுப்பணித் துறையில் ரூ.2,855 கோடிக்கு ஒப்பந்தங்கள் விடப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சட்டப் பேரவை பொதுத் தோ்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில் முதல்வா் பழனிசாமியின் பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறையின் நீா்வள ஆதாரத்துறையில் கடந்த நவம்பா் முதல்வா் ஜனவரி 2021 வரையுள்ள 3 மாதங்களில் ரூ. 2855 கோடி மேல் ஒப்பந்தம் விட்டிருப்பதற்கு கடும் கண்டனத்துக்குரியது.

திமுக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் விடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்கள் குறித்தும் முறைப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவசர கோலத்தில் ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT