தமிழ்நாடு

ஜன.26-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன்

22nd Jan 2021 10:23 PM

ADVERTISEMENT

ஜன.26-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 26-1-2021 செவ்வாய்க்கிழமை  பகல் 12.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’  உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். 
அதுபோது, திமுக மக்களவை  - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
ஜன.29 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT