தமிழ்நாடு

கீழடியில் பிப். முதல் வாரத்தில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி

22nd Jan 2021 11:47 AM

ADVERTISEMENT


கீழடியில் பிப்ரவரி முதல் வாரத்தில் 7-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் வெளியிட்டுள்ள தகவலில், கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடங்கும் தேதி நாளைக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பரிந்துரையை ஏற்று தமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சிவகங்கையில் கீழடி, தூத்துக்குடியில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, ஈரோட்டில் கொடுமணல், கிருஷ்ணகிரியில் மயிலாடும்பாறை, அரியலூரில் கங்கைகொண்ட சோழபுரம், மாளிகை மேடு ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT

முதல்கட்டமாக பிப்ரவரி முதல் வாரத்தில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் 6 கட்ட அகழ்வாராய்ச்சியில் 2600 ஆண்டுகள் பழமையான தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : அகழ்வாராய்ச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT