தமிழ்நாடு

அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நிறைவு

22nd Jan 2021 12:46 PM

ADVERTISEMENT

 

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளா்களுடன் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் காலை 10 மணிக்குத் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் கூட்டத்துக்கு தலைமை வகித்தனர். இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளா்களுடன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும், அமைச்சா்களும் பங்கேற்றனர்.

இதையும் படிக்கலாமே.. ஒசூர் முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 25 கிலோ தங்கம் கொள்ளை

ADVERTISEMENT

இது குறித்து அதிமுக கட்சித் தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட அழைப்பாளர்கள் அனைவரும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட வளாகம் 27.1.2021 அன்று திறந்துவைக்க இருப்பதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது சம்பந்தமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : OPS ADMK eps
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT