தமிழ்நாடு

பேரறிவாளன் விவகாரத்தில் உடனே செயல்படுங்கள்: கமல்ஹாசன்

22nd Jan 2021 07:46 PM

ADVERTISEMENT

பேரறிவாளன் விவகாரத்தில் உடனே செயல்பட்டு அவரை விடுவியுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி 1991, மே 21-இல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் சுமாா் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனா்.

இவா்களின் கருணை மனுவில் முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014-இல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 

இதனிடையே பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் விவகாரத்தில் தமிழக ஆளுநா் 3-4 நாள்களில் முடிவு எடுக்க உள்ளாா் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வியாழக்கிழமை தெரிவித்தாா். இதையடுத்து, இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து கமல்ஹாசன் தனது சுட்டுரையில், பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று. இனியும் வேறு அனுகூலங்களுக்காகக் காத்திருப்பதில் பொருள் இல்லை. உடனே செயல்படுங்கள்; அதிகமாகவே தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளனை விடுவியுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Tags : KAMALHAASAN
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT