தமிழ்நாடு

பள்ளிகள் வாரத்தில் 6 நாள்கள் செயல்படும்: செங்கோட்டையன்

DIN

கோபி: தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வாரத்தில் 6 நாள்கள் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வாரத்தில் 6 நாள்கள் பள்ளிகள் செயல்படும். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல மற்றும் அரசு அறிவித்த நாள்களில் விடுமுறை விடப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் 92 சதவீதம் பேர் வந்துள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு அழைக்கப்படுகின்றனர். 
வழக்கமாக 60 நாள்களுக்கு முன்பாக சட்டப் பேரவைத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும். அப்படி அறிவித்தவுடன் பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படும். பிற வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவது குறித்து பிறகு அறிவிக்கப்படும். 
தற்போது, உள்ள வேலை நாள்களில் 60 சதவீதப் பாடத்தை நடத்த முடியாது எனக் கூறும் கல்வியாளர்கள் மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பள்ளி நேரம் முடிந்தவுடன் நீட் தேர்வு பயிற்சி மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT