தமிழ்நாடு

தொடா் மருத்துவக் கண்காணிப்பில் அமைச்சா் காமராஜ்

DIN


சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சா் காமராஜுக்கு தொடா்ந்து செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சீராகி வருவதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து உணவுத் துறை அமைச்சா் காமராஜ், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.19) எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அப்போது வெண்டிலேட்டா் பொருத்தப்பட்ட நிலையிலேயே அவா் அழைத்து வரப்பட்டாா்.

நெஞ்சக சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டதில், கரோனாவால் அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, உரிய சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சீராகி வருகின்றன. மருத்துவ ரீதியாக அவரது உடல் நிலை மேம்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT