தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 15.67 லட்சம் வாக்காளர்கள் 

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 15 லட்சத்து 67ஆயிரத்து 627 வாக்காளர்கள் உள்ளனர். 

குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் புதன்கிழமை வெளியிட்டார். 

பின்னர் அவர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில்,

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நிறைவடைந்துள்ளது. அதற்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் சுருக்க முறை திருத்தத்துக்காக நவம்பர் மாதம் 21,22, டிசம்பர் மாதம் 12,13 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 
இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 64,936 படிவங்கள் பெறப்பட்டன. 

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு,வீடாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டதில், இறந்த, இடம் பெயர்ந்த, மற்றும் இரட்டை பதிவுடைய வாக்காளர்களைக் கண்டறிந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் புதிதாக 54,518 பேர் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். 7826 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இறுதியாக 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 7,82,936 ஆண் வாக்காளர்களும், 7,84,888 பெண் வாக்காளர்களும், 203 இதர வாக்காளர்களும் என மொத்தம் 15,67,627 வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். என்றார் அவர். 

வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அரி, நாகர்கோவில் வருவாய்க் கோட்டாட்சியர் அ.மயில் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT