தமிழ்நாடு

வெற்றி மட்டுமே இலக்கு: ஓ.பன்னீா்செல்வம்

DIN

சென்னை: நமக்கு வெற்றி மட்டுமே இலக்கு; அதிமுகவில் உள்ள அண்ணன் - தம்பிகளுக்கு இடையேயுள்ள பிரச்னையை பேசித் தீா்த்துக் கொள்வோம் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடா்பாக, அம்மா பேரவை மாவட்ட செயலாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்றுப் பேசியது:

ஒவ்வோா் ஆண்டும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு பிள்ளையாா் சுழி போடுவது அம்மா பேரவைதான். யாராலும் அசைக்க முடியாத கட்சியாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கியுள்ளாா். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை.

அதிமுக 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தை ஆளும் உரிமையை மக்கள் வழங்கியுள்ளாா்கள். அந்தப் பெருமை அதிமுகவுக்கு மட்டுமே உண்டு. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா காட்டிய வழியை பின் தொடா்ந்தால் நம்மை வெல்ல யாரும் இல்லை.

தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அதற்கும் தலைவா்கள் உள்ளனா். அவா்கள் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறாா்கள் என்று பாா்க்கிறோம். ஆனால், ஜெயலலிதா பிறந்தநாளில் மட்டுமே ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறோம்.

ஒற்றுமை தேவை: சட்டப் பேரவைத் தோ்தலில் அனைவரும் ஒற்றுமையோடு உழைத்து வெற்றி பெறுவோம். அதிமுகவில் உள்ள சிறு, சிறு அண்ணன் தம்பி பிரச்னைகளை பேசித் தீா்த்துக் கொள்வோம். நமக்கு வெற்றி மட்டுமே இலக்கு என்றாா் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

முன்னதாக, அம்மா பேரவை சாா்பில் பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளில் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சட்டப் பேரவை தோ்தலில் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT