தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்: விதிமுறைகளைக் கடைப்பிடித்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய காவல்துறையினர்

DIN

நாட்டில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் வாகனங்கள் இதனால் ஏற்படும் விபத்துக்கள் இறப்புகள், இழப்புகள், ஏராளம் எனவே இதனைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் அரசு சார்பில் சாலை விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான சாலை பாதுகாப்பு வாரம் என்பது சாலை பாதுகாப்பு மாதம் ஆக மாற்றப்பட்டு நாடு முழுவதும் இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதி தெற்கு ரத வீதி சந்திப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி நமசிவாயம் தலைமை வகித்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர ஆய்வாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய டிஎஸ்பி சாலை பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் அவ்வாறு கடைப்பிடித்தால் ஏற்படும் விபத்துகளில் பாதி அளவு குறையும் இருசக்கர வாகனங்களில் வரும் போது அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் சாலையில் வாகனங்களை  ஓட்டி வரும்போது செல்போன் பேசிக்கொண்டு வரக்கூடாது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டும் போது கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் அதிவேகமாகச் செல்லக் கூடாது. இந்த ஆண்டு சாலை விதிமுறைகளை மதிப்போம் என அனைத்து வாகன ஓட்டிகளும் இந்த 32வது சாலை பாதுகாப்பு மாதா விழிப்புணர்வு விழாவில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பேசினார். 

பின்னர் சாலையில் ஹெல்மெட் அணிந்தும் காரில் சீட் பெல்ட் அணிந்தும் வந்த வாகன ஓட்டிகளுக்கு டிஎஸ்பி நமசிவாயம் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பால்கோவா வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கீழரத வீதி - தெற்குரதவீதி சந்திப்பில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சாலை விதிகளை மதித்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்த டிஎஸ்பி நமசிவாயம் ஆய்வாளர் பாஸ்கர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT