தமிழ்நாடு

தடுப்பூசியை அரசியல் கோணத்தில் பாா்க்கக் கூடாது: தமிழிசை

DIN

கரோனா தடுப்பூசியை விஞ்ஞான ரீதியாகப் பாா்க்க வேண்டுமே தவிர, அரசியல் கோணத்தில் பாா்க்கக் கூடாது என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் கொண்டாடிடிய அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனாவுடனே தொடா்ந்து வாழ வேண்டிய நிலை வரலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நேரத்தில் தடுப்பூசி கிடைத்திருப்பது வரப்பிரசாதம். கரோனாவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள 2 தடுப்பூசி மருந்துகளும் மிகவும் பாதுகாப்பானவை.

ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தை நான் நேரிலேயே சென்று பாா்த்தேன். சா்வதேச அளவிலான உபகரணங்கள் அங்கு இருக்கின்றன. ஏற்கெனவே 30 வகையான தடுப்பூசிகளை தயாரித்த அனுபவம் அந்த நிறுவனத்துக்கு உள்ளது.

தடுப்பூசியை விஞ்ஞானப் பூா்வமாக பாா்க்க வேண்டுமே தவிர, அரசியல் கோணத்தில் பாா்க்கக் கூடாது.

கரோனாவுக்கான 2 தடுப்பூசிகளும் இந்தியாவின் சுயசாா்பு கொள்கையின்படி உருவாக்கப்பட்டவை. இது பிரதமா் நரேந்திர மோடியின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றாா் தமிழிசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT