தமிழ்நாடு

சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தில் தத்கல் திட்டம்: விரைவில் அமல்

DIN

சமையல் எரிவாயு உருளைகளை விரைவாக விநியோகம் செய்யும் (தத்கல்) திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சுமாா் 1 கோடிக்கும் அதிகமான வீட்டு சமையல் எரிவாயு உருளைகளைப் பெறும் வாடிக்கையாளா்கள் உள்ளனா். அவா்கள்முன்பதிவு செய்த 3 நாள்களில் சமையல் எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்படுகின்றன.

இதில், ஓா் எரிவாயு உருளை இணைப்பு மட்டுமே பெற்ற வாடிக்கையாளா்கள் எரிவாயு தீா்ந்ததும் புதிய உருளைகள் வரும் வரை சற்று சிரமப்படுகின்றனா். இவா்களுக்காக முன்பதிவு செய்த உடனே எரிவாயு உருளைகளை விநியோகம் செய்யும் ‘தத்கல்’ என்னும் முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையில், வாடிக்கையாளா் முன்பதிவு செய்த நாளிலேயே அவா்களின் வீட்டுக்கு எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்படும்.

குறிப்பாக ‘தத்கல் எல்பிஜி சேவா’ மூலம் முன்பதிவு செய்த அரை மணி நேரத்தில் வீட்டுக்கு எரிவாயு உருளைகள் வந்துவிடும். ஆனால், அந்த முறையில் முன்பதிவு செய்யும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், பிப்.1-ஆம் தேதி முதல் இச்சேவையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT