தமிழ்நாடு

வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் துரித காச நோய் கண்டறியும் முகாம் 

DIN

வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் துரித காச நோய் கண்டறியும் முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பரிசோதனை செய்து கொண்டனர்.      

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் துரித காச நோய் கண்டறியும் முகாம் இன்று நடைபெற்றது. திருவெண்காடு ஆரம்பச் சுகாதார நிலையம் மூலம் நடத்தப்பட்ட இந்த முகாமினை  முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் மணிமாறன் மற்றும் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செந்தில்நாதன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். 

இந்த முகாமின் மூலம் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் உடனடியாக எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு அவர்களுக்கு காசநோய் அறிகுறிகள் இருந்தால் மேல் சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் திரளான பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT