தமிழ்நாடு

பவானியில் காலிங்கராயன் உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

DIN

பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள காலிங்கராயன் முழு உருவச் சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினர்.

பவானி ஆற்றில் தடுப்பணை கட்டியதோடு வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நாளான தை மாதம், 5-ம் தேதி காலிங்கராயன் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் காலிங்கராயன் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் முழு உருவ வெண்கலச் சிலைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காலிங்கராயன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, எஸ்.ஈஸ்வரன், வி.பி.சிவசுப்பிரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார், ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணைமேயர் கே.சி.பழனிச்சாமி, சித்தோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.வரதராஜன், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சித் தலைவர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் காலிங்கராயன் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, நிர்வாகிகள் வி.சி.சந்திரகுமார், குறிஞ்சி சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காலிங்கராயன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் திமுக ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி, ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினர்  கணேசமூர்த்தி மற்றும் நிர்வாகிகள்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் மாநில அமைப்பாளர் துரைராஜா, ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மலை மாவட்டச் செயலாளர் லோகநாதன்,  பவானி நகரச் செயலாளர் ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேலும், பல்வேறு பொதுநல அமைப்புகள் பொதுமக்கள் திரண்டு வந்து காலிங்கராயன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்ததோடு, காலிங்கராயன் வாய்க்காலில் மலர் தூவி வழிபாடு நடத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT