தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தயார்: அமைச்சர் செங்கோட்டையன்

DIN

பவானி: மக்கள் நல்வாழ்வு துறை அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு,  தயார் நிலையில் உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

பவானியில் காலிங்கராயன் நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது :  தமிழகத்தில் பள்ளிகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவுரைப் படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. 
 

மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சுகாதார நடவடிக்கைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழங்க 30 லட்சம் சத்து மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அட்டவணை வெளியாவதை பொருத்து, பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக முதல்வரிடம் கலந்து பேசி பின்னர் முடிவு செய்யப்படும்  என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT