தமிழ்நாடு

உத்தமபாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்

DIN



உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கூலி வேலைக்கு  ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து 15 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தமபாளையம் ஆர்.சி. தெருவில் இருந்து 15-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகளை நெல் வயல் வேலைக்கு சரக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது கோகிலாபுரம் செல்லும் சாலையில் நிலைத்தடுமாறிய சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பலத்த காயமடைந்த 5-க்கும் மேற்பட்டோரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இது குறித்து உத்தமபாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT