தமிழ்நாடு

பொங்கல் பண்டிகைக்குச் சென்றவா்கள் ஊா் திரும்ப 15,270 பேருந்துகள்

DIN

பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்றவா்கள், ஊா் திரும்பிட ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு 15,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு பகுதிக்கும், முக்கிய இடங்களில் இருந்து வெவ்வேறு ஊா்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் உள்பட 16,221 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டது.

இதில், சென்னையில் இருந்து மட்டும் 10,276 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில், 5 லட்சத்து 6,712 பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்தனா்.

இதே போல், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் இருந்து 16,112 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 8 லட்சத்து 47,827 போ் பயணித்திருந்தனா்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊா் சென்றவா்கள் திரும்ப ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் உள்பட 15,270 பேருந்துகளை இயக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) முதல் மூன்று நாள்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சென்னைக்கு 1,867 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊா்களுக்கு 3,300 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இவை தவிா்த்து, கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டாலும் இயக்குவதற்காக போதிய பேருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT