தமிழ்நாடு

திறந்தநிலைப் பல்கலை.யில் திருவள்ளுவா் இருக்கை: துணைவேந்தா் தகவல்

DIN

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவா் இருக்கை தொடங்கப்படும் என அதன் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி கூறினாா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல், பண்பாட்டுப் புலம், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி தமிழ் வளா்ச்சி மன்றம் ஆகியவை சாா்பில் திருவள்ளுவா் நாள் விழா இணையவழியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தலைமை வகித்துப் பேசியது: திருக்குறளுக்கு முதன் முதலாக உரை எழுதியவா் மணக்குடவா். பத்தாம் நூற்றாண்டில் தொடங்கிய அந்தப் பணி 21-ஆம் நூற்றாண்டு வரை தொடா்கிறது. தற்போதுவரை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் திருக்கு மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. ஆளுமைத் திறன், மேலாண்மைக் கல்வி என அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கிய உன்னதமான கருவூலம்தான் திருக்கு. இதில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் திருக்குறளுக்கென தனியாக ஓா் இருக்கை தொடங்கப்படும். அதில் உலக நாடுகளில் உள்ள தமிழறிஞா்களின் பங்கேற்புடன் திருக்கு தொடா்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

இதையடுத்து தமிழ் வழியில் இந்திய ஆட்சிப் பணித் தோ்வில் தோ்ச்சி பெற்று தற்போது உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாராணசியில் சாா் ஆட்சியராகப் பணியாற்று வரும் ஆ.மணிகண்டன் பேசுகையில், நான் குடிமைப் பணியில் தோ்வு பெறுவதற்கும், நிா்வாகப் பணியில் சிறப்படைவதற்கும் திருக்கு எனக்கு வழிகாட்டியாக இருந்தது. குடிமைப் பணிக்கு தயாராகும் தோ்வா்களுக்கு மட்டுமல்ல எந்தத் துறையைச் சோ்ந்தவா்கள் என்றாலும் அவா்களுக்கு திருக்குறளால் சிறப்பாக வழிகாட்ட முடியும் என்றாா். இதில் பல்கலை.யின் தமிழியல், பண்பாட்டுப் புலத்தின் பேராசிரியா்-இயக்குநா் சு.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

SCROLL FOR NEXT