தமிழ்நாடு

வைகை அணையிலிருந்து 58-ம் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

DIN

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி, நிலக்கோட்டை பகுதிகளின் பாசனத்திற்கு சனிக்கிழமை 58-ம் கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

வைகை அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை இரவு 68.50 அடியை எட்டியதால், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் சனிக்கிழமை அதிகாலை 3-ம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வழக்கமாக அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததும், அணையிலிருந்து உபரி நீர் வைகை ஆற்றில் திறக்கப்படும். ஆனால், தற்போது அணையிலிருந்து உபரியாக வரும் தண்ணீரை வெளியேற்றாமல், அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்க பொதுப் பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், வைகை அணையிலிருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாரம் ஆகியவற்றில் உள்ள 2,285 ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக 58-ம் கால்வாயில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கம்பம் எஸ்.டி.கே.ஜக்கையன், உசிலம்பட்டி நீதிபதி, பெரியாறு - வைகை வடிநிலக் கோட்ட கண்காணிப்பு  பொறியாளர் எம்.சுகுமார், வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT