தமிழ்நாடு

பொங்கல் திருநாள்: அரசுப் பேருந்தில் 5.6 லட்சம் பேர் பயணம்; ரூ.5.46 கோடி வருவாய்

15th Jan 2021 12:23 PM

ADVERTISEMENT

 

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சுமார் 5.6 லட்சம் பேர் பயணித்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு 5.46 கோடி வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10,276 பேருந்துகளில், 5 இலட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம், முன்பதிவு வாயிலாக, 5 கோடியே 46 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொயத ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று வருகின்ற வகையில், தமிழக அரசின் சார்பில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில், போக்குவரத்துத் துறையின் சார்பில் பல்வேறு சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை மற்றும் பிற முக்கிய ஊர்களிலிருந்தும் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழக முதல்வரின் சீரிய முயற்சியின் காரணமாக, கோவிட்-19 நோய் தொற்று தமிழகத்தில் பெருமளவு குறைந்துள்ளது. மேலும், பேருந்துகளில் 100% பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லுகின்ற பொதுமக்களின் நலனை பாதுகாக்கின்ற வகையில், அரசு செயல்படுத்தியுள்ள வழிக்காட்டுதல்களான கட்டாய முகக்கவசம், வெப்பமாணி மூலம் பரிசோதனை, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு செயல்படுத்தியுள்ள வழிக்காட்டு நெரிமுறைகளை பின்பற்றி இந்த பண்டிகைக்கு பேருந்துகளை இயக்கிடுமாறு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  உத்தரவிட்டுள்ளார். 

அதனடிப்படையில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனை பயணிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு, கடந்த 11.01.2021, 12.01.2021, 13.01.2021 மற்றும் 14.01.2021 காலை 6.00 மணி வரையில், சென்னையிலிருந்து 10,276 பேருந்துகள் இயக்கப்பட்டு, 5,06,712 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

நாளது வரையில், 1,22,600 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதில், சென்னையிலிருந்து 45,275 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து 77,325 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், போக்குவரத்துக் கழகத்திற்கு 5 கோடியே 46 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கும், பிற பகுதிகளிலிருந்து மற்ற ஊர்களுக்கும் சென்றுள்ள பயணிகள் திரும்பிட ஏதுவாக, வரும் 17.01.2021, 18.01.2021 மற்றும் 19.01.2021 ஆகிய மூன்று நாட்களுக்கு, பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 9,543 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து மற்ற பிற இடங்களுக்கு 5,727 பேருந்துகள் என ஆகமொத்தம் 15,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : pongal
ADVERTISEMENT
ADVERTISEMENT