தமிழ்நாடு

ஊத்தங்கரை துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு

9th Jan 2021 02:50 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு புடவைகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு த.மோகன்ராஜ், த.அசோக்குமார், திருப்பத்தூர் கு.ஸ்ரீதர், ஆண்கள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜேஆர்சி கு.கணேசன் ஆகியோர் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றுகின்ற துப்புரவுப் பணியாளர்களுக்கு புடவைகள் மற்றும் இனிப்பு வழங்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் பனந்தோப்பு எஸ்.சக்திவேல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன்,ஆசிரியர்கள் ர.சக்தி,ச.உமா, பேரூராட்சி மேஸ்திரி பெரியசாமி மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துப்புரவுப் பணியாளர்களுக்குப் புத்தாடைகள் வழங்கி வருவதாக ஜேஆர்சி ஆசிரியர் கு‌கணேசன் கூறினார். புத்தாடைகள் வழங்கி நல்ல உள்ளங்களுக்கு துப்புரவுப் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்தனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT