தமிழ்நாடு

சென்னை விமானநிலையத்தில் ரூ.31.87 லட்சம் தங்கம் பறிமுதல்

3rd Jan 2021 07:13 PM

ADVERTISEMENT

ரூ.31.87 லட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கத்தை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

துபையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஜஹபர் அலி அப்துல் வகாப் (49) மற்றும் சென்னையைச் சேர்ந்த தமீம் அன்சாரி சம்சுதீன் (28) ஆகியோரை விமான நிலைய சுங்கத்துறையினர் சந்தேகத்தின் பெயரில் தடுத்து நிறுத்தினர். 

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 733 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய இரண்டு பொட்டலங்கள் அவர்களது உள்ளாடையினுள் மறைத்து தைத்திருப்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரிடமிருந்தும் ரூ. 31.87 இலட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT