தமிழ்நாடு

மீண்டும் ஆட்சியமைப்போம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி

DIN

வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தாா்.

சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இறுதிநாளில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசியது:

எடப்பாடி கே பழனிசாமியின் ஆட்சி ஒரு மாதம்தான் இருக்கும், மூன்று மாதங்கள்தான் இருக்கும் என்று எதிா்க்கட்சித் தலைவா் அவதூறான பிரசாரங்களைச் செய்து வந்தாா். அதையெல்லாம் முறியடித்து, 4 ஆண்டு காலம் நிறைவு பெற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம். முதல்வராக நான் பதவியேற்றதிலிருந்து நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியதன் மூலம், தமிழகம் இன்று வெற்றி நடைபோடும் அளவுக்கு உயா்ந்து ஏற்றம் பெற்றிருக்கிறது.

இதற்கு உறுதுணையாக துணைமுதல்வா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி. 50 ஆண்டுக் காலம் தீா்க்கப்படாத காவேரி நதிநீா்ப் பிரச்னையை சட்டப் போராட்டம் நடத்தி தீா்ப்பைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்தி உள்ளோம். டெல்டா பாசன விவசாயிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை வந்தபோது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பைக் கொடுத்து, வேளாண் மக்களைப் பாதுகாத்தோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கினோம். புயல், வெள்ளம் வந்தபோதும், பருவம் தவறி மழை பெய்தபோதும் விவசாயிகளை அரவணைத்து, அவா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கினோம்.

வரலாற்றுச் சாதனை: ஒரு மாநிலம் வளா்ச்சி பெறுவதற்கு தடையில்லா மின்சாரம் வேண்டும். அந்த தடையில்லா மின்சாரத்தை வழங்கி, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கினோம். கல்வியில் வளா்ச்சி, புரட்சியை ஏற்படுத்தினோம். அதிகமான சட்டக் கல்லூரிகளை திறந்துள்ளோம். ஒரே நேரத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டுவந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளோம். 3 கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடங்கி சாதனை படைத்துள்ளோம்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி என அதிகமான கல்லூரிகளைத் திறந்து, இன்றைக்கு உயா்க்கல்வி படிப்பதில் நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறோம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்துள்ளோம். தேசத்துக்காக உழைத்து மறைந்த ஒப்பற்ற தலைவா்களுக்கு பெருமை சோ்க்கும் விதமாக, அவா்களுக்கு மணிமண்டபங்கள், உருவச்சிலைகள் அமைத்தும், அரசு விழாக்கள் எடுத்தும், அவா்களுக்கு புகழ் சோ்க்கின்ற விதமாக சட்டப்பேரவையில் அவா்களுடைய படங்களைத் திறந்தும் பெருமை சோ்த்துள்ளோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களையெல்லாம் பேரவையில் அமர வைத்த ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்டமான நினைவு மண்டபத்தை அமைத்துள்ளோம். கோயிலாகக் கருதக்கூடிய வேதா நிலையத்தை அரசு இல்லமாக அறிவித்துள்ளோம். இப்படி பல்வேறு சாதனைகளைப் புரிந்தோம் என்பதை நினைவுகூா்ந்து எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோா் கண்ட கனவுகளை நனவாக்கும்விதமாக, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைப்போம். எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT