தமிழ்நாடு

அரசாணை வெளியிடாமல் வன்னியர் இடஒதுக்கீடா?: ஸ்டாலின்

27th Feb 2021 11:30 AM

ADVERTISEMENT

அரசாணை வெளியிடாமல் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் உங்கள் தொகுதி நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது குறித்து பொதுமக்களிடம் பேசிய அவர், அரசாணை வெளியிடாமல் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தப்போவது திமுக தான் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT