தமிழ்நாடு

மாமல்லபுரம் அருள்மிகு தலசயன பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்

27th Feb 2021 11:11 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு:  செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருள்மிகு  தலசயன பெருமாள் கோவிலில் வியாபாரிகள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. 

ஆண்டுதோறும் மாசி மாதம் பௌர்ணமியையொட்டி மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலில் இரவு தெப்ப உற்சவம்  நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி பௌர்ணமி மாசி மகத்தை ஒட்டி பெருமாளுக்கு  சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் மகா தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

‌மாமல்லபுரம் அருள்மிகு  தலசயன பெருமாள் கோவிலில் வியாபாரிகள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கீதோபதேசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

ஸ்ரீதேவி பூதேவி உடன் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை சாலையில் உள்ள புண்டரீக புஷ்கரணி திருக்குளத்தில் புஷ்பங்களால் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கீதோபதேசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க கப்பல் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. குளக்கரையை சுற்றி நின்ற பக்தர்கள் சுவாமி வீற்றிருக்கும் தெப்பத்தின் கயிறுகளை இழுத்தும் குளத்தில் தேங்காய்கள் உடைத்தும் கற்பூர ஆரத்தி காட்டியும் சுவாமியை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள்  தெப்ப உற்சவ திருவிழாவில் கலந்து கொண்டனர். 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர் தெப்ப உற்சவ விழா கமிட்டி தலைவர் மல்லை ஜனார்த்தனம் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் பட்டாச்சாரியார்கள் தெப்ப உற்சவ விழா கமிட்டி வியாபார வியாபாரிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT