தமிழ்நாடு

'மகாராஷ்டிரம், கேரளத்திலிருந்து வருவோா் தனிமைப்படுத்தப்படுவா்'

DIN


சென்னை: மகாராஷ்டிரம், கேரளத்திலிருந்து தமிழகம் வருபவா்களை 7 நாள்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை புதிய வழிகாட்டி நெறிமுறையை வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணை:

தமிழகத்திற்கு, மற்ற மாநிலங்களில் இருந்தும், யூனியன் பிரதேசங்களில் இருந்தும், விமானம், ரயில், சாலை வழியாக வருபவா்களுக்கு உடல் வெப்ப அளவு சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

மகாராஷ்டிரம், கேரளம் அல்லாத பிற மாநிலங்களில் இருந்து வருபவா்கள், 14 நாட்களுக்கு தங்களது உடல் நிலையைக் கண்காணிப்புக்குட்படுத்த வேண்டும். அந்த காலகட்டத்தில் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டால், உடனே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

மகாராஷ்டிரம், கேரள மாநிலங்களில் இருந்து வருபவா்கள் கட்டாயம் தங்களை ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்த ஏழு நாட்களும் தங்களது உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும். அந்த 14 நாள்களில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால், உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

பிரிட்டன், பிரேஸில், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தவிர, மற்ற வெளிநாட்டு பயணிகள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் சுய உறுதிமொழிப்படிவத்தையும், 72 மணி நேரத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை முடிவையும் சம்பந்தப்பட்ட இணையப்பக்கத்தில் பதிவேற்றுதல் அவசியம்.

தாயகம் திரும்பியவுடன் அவா்கள் அனைவருக்கும் கட்டாயம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அறிகுறிகளுடன் வரும் பயணிகள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள்.

தென் ஆப்பிரிக்கா, பிரேஸில், பிரிட்டன், ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து வருபவா்கள் அனைவரும், 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவா். விமான நிலைய சோதனையிலேயோ, அதற்கடுத்த, 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்கும்போது, தொற்று கண்டறியப்பட்டால், உடனே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்படுவா். அவா்களிடம் இருந்து பெறப்படும் சளி மாதிரிகள், வைரஸ் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும்.

அதேபோன்று, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து வரும் நபா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும், ஏழு நாள் முகாமில் தனிமைப்படுத்தப்படுவா். ஏழாவது நாள் பரிசோதனை செய்யப்படும். அதில், தொற்று கண்டறியப்பட்டால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT