தமிழ்நாடு

போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச முதல்வர் முன்வருவாரா?: ஸ்டாலின் கேள்வி

DIN

சென்னை: போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேச முதல்வர்  முன்வருவாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருப்பது வரவேற்கத்தக்கது. சென்ற முறை 58 வயதில் இருந்து 59 வயதாக மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியபோதே 60 வயதாக ஆக்கியிருக்க வேண்டும்.

தற்போது தேர்தல் வருகின்ற காரணத்தால் அதைக் கருத்தில் கொண்டு அரசியல் ரீதியான பலன்களை எதிர்பார்த்துத் தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, இப்போதுதான் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருக்கிறார். அதே நேரத்தில், படித்து கல்வித் தகுதி பெற்று, தமது எதிர்காலத்தை நினைத்து, மிகுந்த கவலையுடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரித்து, அவர்களுக்கான வாய்ப்புகள் வேறு எந்த வழியிலும் பறிபோகாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்துச் செயல்படுத்துவதும் அவசியம்!

ஆனால், போராடும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை அழைத்துப் பேசுவதற்குக் கூட முதலமைச்சர் பழனிசாமிக்கு மனமில்லை. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு உரிய  பயன்களை அளிக்காமல் ஒருபுறம் நிந்தித்து -  போராடும் அரசு ஊழியர்களைக் கொச்சைப்படுத்தி, வழிமறித்து, இரவோடு இரவாகக்  கைது செய்து,  அடக்கு முறைகளைக் கையாண்ட  அரசு ஊழியர்கள் விரோத மனப்பான்மை கொண்ட -  முதலமைச்சர் பழனிசாமியின் வறண்ட இதயத்தை  அரசு ஊழியர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.  இப்போதாவது போக்குவரத்துக் கழக ஊழியர்களை முதலமைச்சர் நேரில் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வருவாரா?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT