தமிழ்நாடு

பிப்.26, 27-ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லத் தடை

DIN


திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் வருகிற 26, 27-ஆம் தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வந்தாலும் கேரளம், தெலங்கானா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வருவதற்கு அனுமதி அளித்தால் பிற மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள், பொதுமக்கள் மூலம் மீண்டும் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
எனவே, வெள்ளிக்கிழமை (பிப்.26) மாலை 3.49 மணி முதல் சனிக்கிழமை (பிப்.27) பிற்பகல் 2.42 மணி வரை பக்தர்கள், பொதுமக்கள் கிரிவலம் செல்வதற்கு திருவண்ணாமலைக்கு வர வேண்டாம்.  இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT