தமிழ்நாடு

தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை தொடர்கிறது: இரா.முத்தரசன்

25th Feb 2021 07:59 PM

ADVERTISEMENT

தா.பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை தொடர்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர்.தா.பாண்டியன் நேற்று (24.02.2021) உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நோய்த்தொற்று மற்றும் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறப்பு மருத்துவர்கள் தீவிர சிகிக்சை அளித்து வரும் நிலையிலும் தோழர்.தா.பாண்டியன் உடல்நிலையில் மாற்றம் காணாத நிலை நீடிக்கிறது.
செய்தி அறிந்த கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் டி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் தமீம் முன் அன்சாரி, கருணாஸ், தனியரசு மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு நேரில் வந்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் தோழர் தா.பா. குடும்பத்தாரிடம் விசாரித்து சென்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

Tags : DPandian
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT