தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.70.28 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

25th Feb 2021 09:18 PM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் ரூ.70.28 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

துபாய் செல்லவிருந்த 6இ-65 இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக சென்றுகொண்டிருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நூர் முகம்மது சுல்தான், 60, என்பவர் வெளிநாட்டு பணம் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து சென்னை விமான நிலையித்தில் அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அப்போது அவரது கால் சட்டை பையிலிருந்து ரூபாய் 1.45 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

விமானத்திற்கு அனுப்பப்பட்ட அவரது பை திரும்ப பெறப்பட்டது அதை திறந்து பார்த்த போது, ரூபாய் 68.83 லட்சம் மதிப்பிலான சௌதி அரேபிய ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மொத்தம் ரூபாய் 70.28 லட்சம் வெளிநாட்டு பணம் சுங்க சட்டத்தின் ஃபெமா (பண ஏற்றுமதி மற்றும் இறக்குமதி) விதிகளின்படி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags : chennai airport
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT