தமிழ்நாடு

முதல்வரிடம் பரிசு பெற்ற ஊத்துக்கோட்டை பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

DIN

ஊத்துக்கோட்டை: தமிழக முதல்வரிடம் பரிசு பெற்ற ஊத்துக்கோட்டை பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை அடுத்த வேளகாபுரம் மேட்டு காலனியைச் சேர்ந்த தேவன் என்ற கூலித் தொழிலாளியின் 17வயது மகள் நர்மதா. இவர் ஊத்துக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தமது கல்வியை பற்றி மட்டுமே சிந்திக்காமல் தமது கிராமத்தை சுற்றியுள்ள மாணவிகள் கல்வியினை மேம்படுத்துவதில் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். 

குடும்ப சூழல் மற்றும் சொந்த பிரச்னைகள் காரணமாக அரசு பள்ளிப் படிப்பினை தொடர முடியாமல் இடைநிற்கும் மாணவிகளை கண்டறிந்து அவர்களது வீடுகளுக்குச் சென்று மீண்டும் கல்வியை தொடர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் அண்மையில் இடைநின்ற 4 மாணவிகளை நர்மதா ஊக்கப்படுத்தி அவர்களை மீண்டும் கல்வி தொடர நடவடிக்கை எடுத்துள்ளார். 

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையின் பேரில் அரசு பள்ளி மாணவி நர்மதாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி சான்றிதழ் மற்றும் 1லட்ச ரூபாய் பரிசு வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார். 
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரால் பரிசு பெற்ற மாணவியை கௌரவப்படுத்தும் வகையில் ஊத்துக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இதில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவி நர்மதாவை பாராட்டி பேசினார். கல்வி பயிலும் மாணாக்க பருவத்திலேயே சமூக அக்கறையுடன் செயலாற்றி வரும் மாணவி நர்மதாவிற்கு பள்ளி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் அனைத்து உதவிகள் செய்யப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் சார்பில் மாணவிக்கு 2 கிராம் தங்க மோதிரம் அணிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT