தமிழ்நாடு

இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை: தொழிற்சங்கம்

24th Feb 2021 10:20 PM

ADVERTISEMENT

தமிழக அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (பிப்.25) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்துக் கழக ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

இதனிடையே போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.1000 இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்தார்.

இதனால் வேலைநிறுத்தப் போராட்ட முடிவை கைவிட்டு ஊழியர்கள் நாளை பணிக்கு வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள இடைக்கால நிவாரணம் போதுமானதாக இல்லை என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் இடைக்கால நிவாரணம் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
மேலும், நாளை (பிப்.25) திட்டமிட்டபடி பேருந்து போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : union தொழிற்சங்கம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT