தமிழ்நாடு

நரிக்குறவர்களுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வாக்காளர் அடையாள அட்டை

DIN

திருவள்ளூர் நரிக்குறவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் நேரில் விண்ணப்பம் பெற்று ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணைய அனுமதி பெற்று வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று வழங்கினார்.

திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அதிகத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தது நரிக்குறவர் மற்றும் இருளர் காலனி உள்ளது. இந்த காலனிகளில் 18 வயது பூர்த்தி அடைந்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி நேரில் சென்று குறிப்பிட்ட வயதை அடைந்தோர் மற்றும் இதுவரையில் வாக்களிக்காதோர் 50 பேர் குறித்த விவரங்களையும் சேகரித்தார். இதற்காக அவர்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டைகள் பெறுவதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பெற்றார். அதைத் தொடர்ந்து தேர்தல் பிரிவு அலுவலகம் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் அனுமதி அளித்த நிலையில் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிட்டு தயாராகியது.

இந்த நிலையில் அதிகத்தூரில் உள்ள நரிக்குறவர்களுக்கு நேரில் வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை கோட்டாட்சியர் ப்ரித்தி பார்கவி வழங்கினார். இதேபோல், இருளர் காலனியில் 25 பேருக்கும், நரிக்குறவர் காலனியில் 25 பேருக்கும் என 50 பேருக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவும், அட்டைகள் பெற்ற ஒவ்வொருவருக்கும் வீடுகளில் வளர்க்கும் வகையில் மரக்கன்றுகளையும் அவர் வழங்கினார். அப்போது, வட்டாட்சியர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் மோகனா உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இது தொடர்பாக கோட்டாட்சியர் கூறுகையில், 

இந்த காலனியில் உள்ள அனைவரும் முதல் தலைமுறை வாக்காளர்கள் எனவும், அவர்கள் தலைமுறையில் யாரும் இதற்கு முன் வாக்களித்தது இல்லை. இந்த நிலையில் தனிப்பட்ட முறையில் நேரில் ஆதார் மற்றும் குடும்ப அட்டை முதலியவைகளை சேகரித்து அதனுடன் புகைப்படத்தையும் இணைத்து விண்ணப்பித்தேன். பின்னர் இணையதளத்திலும் பதிவு ஏற்றம் செய்ததால், அவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

பின்னர் ஆட்சியர் பா.பொன்னையாவின் சிறப்பு அனுமதியுடன் வாக்காளர் பட்டியலிலிருந்து அந்த 50 பேருக்கு மட்டும் தனியாகப் பதிவிறக்கம் செய்து வண்ண வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு குறைந்தபட்சம் 4 முதல் 6 மாதங்கள் ஆகும். ஆனால், விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பூந்தமல்லி, ஆவடி வட்டங்களிலும் இருளர், நரிக்குறவர்கள் தேர்வு செய்து தலா 50 பேருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அதிகத்தூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண் ஏஞ்சல் ரோஸ்(23) கூறுகையில், 

எங்களது இனத்தில் முதல் தலைமுறையினர் நீண்ட நாள்களாகவே வாக்களிக்க முடியாத நிலையிருந்தது. தற்போதுதான் கோட்டாட்சியர் எடுத்த நடவடிக்கையால் முதல் முதலாக வண்ண வாக்காளர் அட்டை கிடைத்துள்ளது. என்னுடைய புகைப்படத்துடன் உள்ளதைப் பார்த்தும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போதுதான் தனக்கு வாக்களிக்க உரிமையும், கடமையும் உள்ளதையும் அறிந்தேன். அதனால் வரும் தேர்தலில் கட்டாயம் வாக்களிப்பேன் என்பதோடு, அனைவரையும் வாக்களிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT